என். டி. டி .வி ஒளிபரப்பு தடை: தற்காலிகமாக நிறுத்தி வைப்பு! மத்திய அரசு

Must read

டில்லி,
என்.டி.டி.வி  இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசின்  தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
ndtv
பதான்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்ட என்டிடிவி சேனல், ராணுவ முகாமில் இருந்த  இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டதாக,  என்டிடிவி இந்தியாவின் இந்தி மொழி அலைவரிசையின் ஒளிபரப்புக்கு 24 மணிநேரம் தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை ஆணையிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை  எதிர்த்து, என்டிடிவி சார்பில், இன்று உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், என்.டி.டி.வியின் ஒளிபரப்பு தடையை நிறுத்தி வைத்து  மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அறிவித்து உள்ளது.
psx_20161107_222559

More articles

Latest article