டில்லி,
வகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் காணாமல் போனது குறித்து, ஜனாதிபதியை சந்தித்து பேசினார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
காணாமல் போன ஜே.என்.யு மாணவர் நஜீப் குறித்து உள்துறை அமைச்சகத்திட்ம் விளக்கம் கேட்கவும், ஜே.என்யு நிர்வாகம் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஜே.என்.யு. மாணவர் நஜீப்.  அக்டோபர் 15-ம் தேதி காலை 11 மணி முதல் காணவில்லை. இவர் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி – மாந்தவி விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவருக்கும் ஏபிவிபி மாணவ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
jnu-muharje
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நஜீப் மாயமானார். காணாமல் போன மாணவரை கண்டுபிடிக்க கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று இந்தியா கேட் எதிரே ஜே.என்.யு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை, ராஷ்டிரபதி பவன் சென்று  சந்தித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜேஎன்யூ மாணவர் பிரச்சினையில் அரசியல் தலையீடு காரணமாக டில்லி போலீசார் நடவடிக்கை எடுக்விலை என்று புகார் கூறினார்.
ஜேஎன்யு மாணவர்  நஜிப் காணாமல் போய் 22 நாட்களுக்கு பிறகே, நஜீப்புடஉன் படிக்கும் மற்ற மாணவர்களிடம்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்.
நவம்பர் 3ந்தேதியன்று  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஒற்றுமை கூட்டத்தில் பேசும் போது, டில்லி போலீஸ் இந்த விசயத்தில் ஒழுங்காக புலன் விசாரணை செய்யவில்லை என்று டில்லி போலீஸ் மீது குற்றம் சாட்டினார்.
jnu-strike
மேலும், நஜீப் காணாமல் போனதுக்கு ஏ.பி.வி.பி. மாணவர்கள்தான் காரணம். இது சம்பந்தமாக டில்லி போலீசாருக்கு விசாரணை செய்ய  தைரியம் இல்லை என்றும் கூறினார்.
இதுகுறித்து, டுவிட் செய்துள்ள கெஜரிவால்,  “ஜவஹர்லால் நேரு மாணவர் நஜீப் காணாமல் போனதில் அரசியல் தலையீடு உள்ளது. ஆகவே ஜனாதிபதி தலையிட்டு, உள்துறை அமைச்சகத்திடம்  அறிக்கை கோர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.