நயன்தாரா ஷூட்டிங் இல்லாத சமயங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கம். அதே போல் தான் தற்போது தன் காதலருடன் உலகின் மிக முக்கிய ஹனிமூன் தீவு ஒன்றிற்கு சென்றுள்ளார் நயந்தாரா.

கிரீஸில் உள்ள சாண்டோரினி தீவு காதலர்கள் மற்றும் ஜோடிகள் ஹனிமூன் செல்லும் புகழ்பெற்ற தீவு ஆகும்.

இந்த தீவுக்குத்தான் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.