சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர் காலம்’.. எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார் ராதாரவி. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வருகிற 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படத்தை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.