நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ம் தேதி திருப்பதியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

திருப்பதியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

திருமணம் தொடர்பாக திருப்பதியில் அதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஷீர்டியில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதைத் தொடர்ந்து ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு சென்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி நேற்று அங்கு காணிக்கை செலுத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி சென்றிருப்பதைத் தொடர்ந்து அவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.