இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மூத்த மகள் கதீஜாவுக்கும் – ரியாஸ்தீன் ஷேக்-கிற்கும் திருமணம் நடைபெற்றது.

சவுண்ட் இன்ஜினியரான ரியாஸ்தீன் ஷேக் முகமதுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகள் கதீஜாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளின் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

புதுமணத் தம்பதிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு, இளையமகள் ரஹிமா, மகன் அமீன் ஆகியோர் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.