முதல்ல அவரை போய் பாருங்க; நயன்தாராவின் டேக் டைவர்ஷன்

Must read

nayanthara-vignesh-shivan
தமிழ் சினிமாவில் உச்சத்திலிருந்தபோது சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகைகள் மீண்டும் சினிமாவில் நுழைந்து அதே இடத்தை பிடிக்க தவியாய் தவித்த காலமெல்லாம் உண்டு. ஆனால் நயன்தாராவோ ரீ-எண்ட்ரி கொடுத்து வரிசையாக ஹிட் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். இவர் நடித்தால் கண்டிப்பாக படமும் பிசினஸ் ஆகும் என்ற நிலைக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள்.
இதனால் நயனிடம் கதை சொல்ல இயக்குனர்கள் வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்படி நயன்தாராவிடம் கதை சொல்ல போகும் இயக்குனர்களுக்கு நயன் ஒரே ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி வைக்கிறாராம். முதல்ல விக்னேஷ் சிவன் கிட்ட கதை சொல்லுங்க அவர் ஓகே சொன்னதும் நான் கதை கேட்குறேன் என்கிற பதில் தானாம் அது. அடித்துபிடித்து விக்னேஷ் சிவனை சந்திக்கும் இயக்குனர்களுக்கு நயனை விட பெரிய குண்டாக தூக்கி போடுகிறாராம். இப்போதைக்கு நயனுக்கு வரிசையாக படங்கள் இருக்கு அதுவும் ஹிரோயின் சப்ஜெக்ட் படங்கள்தான். அதனால நீங்க எல்லாரும் நான் சொல்லும்போது வாங்க என்று கூறி அனுப்பிவிடுகிறாராம்.
ம்ம்ம்ம்ம்… தானா சேரும் கூட்டத்தை இப்படி இன்று போய் நாளை வான்னு அனுப்புறாங்களே…! இது எங்க போய் முடியுமோ..!

More articles

Latest article