ப்ளாஷ்பேக்:
தமிழ்த் திரையுலகில் நெம் 1 நடிகையாக வலம் வந்தவர் ஜெயலலிதா.
ஆனால், அவர் நடிகையாக விரும்பவில்லை என்பதும், அவர் நடித்த முதல் படம், ஆங்கிலப்படம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்?
jeya5
தனது அம்மா சந்தியா நடிகையாக இருந்தும் ஜெயலலிதாவுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. சந்தியாவும் அதை விரும்பவில்லை.
படிப்பில் சுட்டியான ஜெயலலிதா, பிற்காலத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.
அதே நேரம், ஜெயலலிதாவுக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆகவே பிரபல நடன ஆசிரியையான கே.ஜே.சரசாவிடம் நடனம் பயின்றார். விரைவாக தேர்ந்து, நடன அரங்கேற்றமும் செய்தார்.
சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படிக்கும் போது ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய ஆங்கில நாடகத்தில் நடித்தார். ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றார்.
yound-jeya
இந்த சமயத்தில் தான் …ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களி்ன் மகன் சங்கர் கிரி எடுக்கப்போகும் ஆங்கில டாக்குமெண்டரியில் நடிக்க நாயகியை தேடிக்கொண்டு இருந்தார்.
திருமதி. ஒய்.ஜி.பி., ஜெயலலிதாவை அந்த வேடத்துக்கு சிபாரிசு செய்தார்.
ஆனால் முதலில் சந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு, படிப்புக்கு இடையூறு இல்லாமல் சனி, ஞாயிறு , விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை வைத்துக்கொள்வதாக, சங்கர்கிரி சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்.
அந்த ஆங்கில டாக்குமெண்டரி படத்தின் பெயர், ‘எபிசில்’. இதுதான் ஜெயலலிதா நடித்த முதல் படம்.
அதன் பிறகு தாயார் சந்தியா ‘நன்ன கர்த்தவ்யா’ கன்னடப் படத்தில் நடித்தபோது, அதில் நடிக்க ஒரு இளம் பெண் தேவைப்பட்டார். அந்தப் படத்தின் இயக்குநர் ஜெயலலிதாவிடம் கேட்க. அவர் மறுத்தார். சந்தியாவும் மறுத்துவிட்டார்.
1jeya-1
மீண்டும் 6 மாதங்கள் கழித்து அதே இயக்குநர் மீண்டும் கேட்க, இப்போது சந்தியா யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மீண்டும் இயக்குநர் கேட்க, கோடை விடுமுறையில் வேண்டுமானால் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி உள்ளார்.
அதன்படி கோடை விடுமுறையில் ஜெயலலிதா நடித்தார்.
அதன் பின் ‘முரடன் முத்து’ என்ற கன்னடப் படம். இந்த நிலையில், பனாரஸ் மெட்ரிக் ரிசல்ட் பரீட்சையில் அதிக மதிப்பெண் பெற்று, மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தது ஜெயலலிதாவுக்கு.
jeya3
அந்த நேரத்தில்தான், டைரக்டர் ஸ்ரீதர் தனது ‘வெண்ணிற ஆடை” தமிழ் படத்துக்காக ஜெயலலிதாவை அணுக…. முழு நேர நடிகை ஆனார் ஜெயலலிதா.
வழக்கறிஞராக ஆசைப்பட்டு சிறப்பாக படித்த மாணவி, முழுநேர நடிகையான கதை இதுதான்.