மல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ங்கர் இயக்கத்தில் கமல் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் தயாராக இருக்கிறது.

தற்போது ஷங்கர், ரஜினி நடிக்கும், 2.0. படத்தை இயக்கி வருகிறார். இதில் எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உட்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் 27ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்துக்கு அடுத்து இந்தியன் 2ம் பாகத்தை இயக்க இருக்கிறார் ஷங்கர். இது குறித்த அறிவிப்பை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஷங்கர் – கமல் இருவரும் அறிவித்தனர். இப்படத்தை லைகா புரோடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் கவுண்டமணி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.