நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை : நடனப் பள்ளி இயக்குனரிடம் விசாரணை

Must read

சென்னை

டிகை அமலா பால் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரை ஒட்டி போலீசார் நடனப்பள்ளி இயக்குனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அமலா பால்.    சிந்து சமவெளி என்னும் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், பல படங்களில் நடித்துள்ளார்.   பிரபல இயக்குனர் விஜய் ஐ திருமணம் செய்த இவர் பிறகு அவரை விவாகரத்து செய்துள்ளார்.    சொகுசுக் கார் வாங்கிய விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது ஒரு புகார் உள்ளது.

இன்று சென்னை தியாகராய நகர் துணை ஆணையரிடம் அமலா பால் ஒரு புகார் அளித்துள்ளார்.  அந்தப் புகாரில் தனக்கு நடன வகுப்பில்,  அந்த நடனப் பள்ளி இயக்குனர் அழகேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் மீது உடனடியாக காவல்துறையினர் புகார் அளித்து ஒரு மணி நேரத்துக்குள்ளாக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.   தற்போது நடனப் பள்ளி இயக்குனர் அழகேசனிடம் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அமலா பால், “ஒரு பெண்கள் நிகழ்ச்சிக்காக நடனப் பயிற்சிக்கு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை எனில் இந்த உலகில் நாம் எதற்காக வாழ்கிறோம்?” எனக் கேட்டுள்ளார்

More articles

Latest article