நக்சலைட்டுகள்-பாதுகாப்பு படையினர் மோதல்! நக்சலைட்டு பலி!!

Must read

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை சுக்மா மாவட்டத்தில் உள்ள  பெய்ஜி பகுதியில் தீவிரவைதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்  இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் நக்சலைட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் அந்த பகுதியில் உள்ள  காட்டுக்குள்   கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவரிடம்  துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திர கல்யாண் தெரிவித்துள்ளார்.
sathiskar
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே  கடந்த மாதம் 27ந்தேதி ஒடிசா மாநில எல்லை பகுதியான சந்தோமேடா கிராமத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article