லக்னோ:
டந்த 5 மாதங்களில் 1012 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளதாக உ.பி சட்டசபையில் அரசு தெரிவித்து உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதத் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது மாநில சட்டசபை நடைபெற்று வருகிறது.  சட்டமன்றத்தில் பாரதீய ஜனதா  சட்டமன்ற உறுப்பின்ர சதிஷ் மகானா, உ.பியில் பதிவாகி உள்ள பாலியல் வழக்குகள் பற்றி  எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக உ.பி. சமாஜ்வாடி அரசு பதில் அளித்து உள்ளது.
அதில், “மார்ச் 15, 2016 முதல் இம்மாதம் வரையில் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள், 4,520 பாலியல் தொந்தரவு வழக்குகள், 1,386 கொள்ளை வழக்குகள் மற்றும் 86 வழிப்பறி வழக்குகள் பதிவாகிஉள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
akilesh
மேலும், இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், இனிமேல் தொடராத வகையிலும் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும்,  பாதுகாப்பை உறுதிசெய்ய ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குற்றப்பிரிவு கிளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அரசு கூறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 5 மாதங்களில் மட்டும் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2014 தேசிய குற்றப்பதிவு அறிக்கையானது, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் கடைசி இடம் வகிப்பததாக குறிப்பிட்டு உள்ளது.
இதுகுறித்து உ.பி. மாநில அரசு, மாநிலத்தில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்களை மட்டுமே மீடியாக்கள் மிகைப்படுத்தி காட்டுகின்றன என்று குற்றம் சாட்டுகிறது.
உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “புலந்த்சாகரில் தாய்-மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய தலைப்பு செய்தியாகியது, ஆனால் இதுபோன்று குர்கான் மற்றும் டெல்லியில் நடைபெற்ற சம்பவங்கள் பெரிதாக்கப்படவில்லை,” என்றார்.
உ.பி. மாநில பெண்கள் ஆணையமும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்று வருத்தம் தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கு 2014-ல் 3,467 ஆக இருந்தது 2015-ல் 9,075 ஆக உயர்ந்து உள்ளது. சுமார் 161 % அதிகரித்து உள்ளது.
தேசிய குற்றப்பதிவு ஆவண அறிக்கையின்படி (என்சிஆர்பி) இந்தியாவில் 2010-ம் ஆண்டில் இருந்து பாலியல் பலாத்கார வழக்குகள் 65 சதவிதம் அதிகரித்து உள்ளது. 2010-ல் 22,172 ஆக இருந்தது 2014-ல் 36,735 ஆக அதிகரித்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 121 சதவிதம் அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 2010-ல் 1,563 ஆக இருந்த பாலியல் பலாத்கார வழக்கு 2014-ல் 3,467 ஆக அதிகரித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.