இந்தியக் கடற்படையில் பணிபுரியும் ரோஹித் குமார், கபடி போட்டியின் மூலம் பிரபலமடைந்தார். கடந்த திங்கள்கிழமை, இவருடைய மனைவி லலிதா, தற்கொலை செய்துண்டார். ரோகித் மனைவி, தற்கொலை செய்யும் முன், வீடியோவில் தற்கொலைக்கான காரணத்தை, பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார் . கணவரின் பெற்றோர் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தனது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுமாறு ரோஹித் தெரிவித்ததாகவும், வீடியோவில் கூறியுள்ளார்.

682659161மனைவி தற்கொலை செய்துகொண்ட உடன், ரோஹித் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி விட்டனர். ரோஹித் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் ரோஹித்தை டில்லி போலீசார் கைது செய்தனர். மகன் கைதை தொடர்ந்து, அவரது தந்தை விஜய் சிங், டில்லி நங்லோய் காவல் நிலையத்தில் சரணடைந்தார். டில்லி காவல் துறையில் விஜய் சிங் துணை ஆய்வாளராக பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

டில்லி நீதிமன்றத்தில் விஜய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 4-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.