இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், தொடர் தோல்வியை சந்தித்து வந்த கோவா அணி வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.

goamumislமும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 20-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா அணியும், மும்பை அணியும் மோதியது. இதில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியைத் தோற்கடித்தது. இதுவரை ஐந்து போட்டியில் விளையாடியுள்ள கோவா அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

41-ஆவது நிமிடத்தில் ஃபெலிஸ்பினோ, கோல் கம்பத்தின் வலது புறம் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். 2-ஆவது பாதி ஆட்டத்தில், 58-ஆவது நிமிடத்தில் மும்பை அணி கோல் வாய்ப்பை தவறவிட்டது. கோல்-யை சமன் செய்யவேண்டும் என்று மும்பை அணி எவ்வளவோ போராடியும், கோல் அடிக்கமுடியவில்லை. இதனால், கோவா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.