உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான ம. நடராஜனின் உடல், அவரது சொந்த ஊரான விளார் கிராமத்தில் இன்று புதன்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.11 மணி அளவில் நடராஜன் உடல் தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே, பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா   , திருச்சி அருகேயுள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் சுமார் அரை மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்தார்

நடராஜன் உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் வந்தவுடன்,  தனி காரில் சசிகலா, டிடிவி. தினகரன், அவரது மனைவி உள்ளிட்டோர் தஞ்சைக்கு வந்தனர்.

நடராஜனின் உடலுக்கு இறுதிஅஞ்சலியும், தஞ்சாவூர் அருளானந்த நகரிலிருந்து இறுதி ஊர்வலமும் நடைபெற இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரில் புதன்கிழமை மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

நடராஜனின் இழப்பு எங்களுக்கும், எங்களது குடும்பத்துக்கும் பெரும் இழப்பு” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.