கடந்த நவம்பர் 8 ஆம்தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்ததையொட்டி பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமலும், கிடைத்த புதிய நோட்டுக்கு சில்லறை மாற்ற இயலாமலும் மக்கள் திண்டாடிவருவது தெரிந்ததே!

new500note

தற்பொழுது நாசிக் அச்சகத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அடுத்த 50 லட்சம் 500 ரூபாய் நோட்டுகள் வரும் புதன்கிழமைக்குள் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
ரிசர்வ் வங்கி ஏற்கனவே 2,000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுவருகிறது. இப்பணிகள் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான மைசூரில் உள்ள அச்சகம் ஒன்றிலும், மேற்கு வங்க மாநிலம் சல்போனி என்ற இடத்திலும் அச்சடிக்கப் பட்டது. தற்பொழுது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலும், மத்திய பிரதேச மாசிலம் தேவாசிலும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இப்பணி இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 40 கோடி 500 ரூபாய் நோட்டுக்களை அரசு அச்சடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது