மாஸ்கோ:

ஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது, இந்த ஆண்டு  இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது.

இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது இந்திய பிரதமர்  நரேந்திரமோடிக்கு வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சின், உயர்ந்த குடிமகனுக்கான சயீத் விருது மோடிக்கு வழங்கப் படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது.

ரஷ்யாவில், இயேசுநாதரின் தூதராக கருதப்படும் ஆன்ட்ரூ பெயரால், 17ம் நுாற்றாண்டில், அதாவது 1698ம் ஆண்டில் அப்போதைய  ரஷ்ய மன்னர் டிசார் பீட்டர் என்பவரால், ‘செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டது.

இந்த விருது இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த 1998ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருது தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சீன அதிபர் ஜி ஜின்பிங், கஜகஸ்தான் அதிபர் நர்சுல்தான் நசர்பாயேவ் உள்பட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய பிரதமர் மோடி இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து, டில்லியில் உள்ள, ரஷ்ய துாதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவத,

இந்தியா, ரஷ்யா ஆகிய  ‘இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தியதற்காக, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது’ என, கூறப்பட்டுஉள்ளது.

விருதுக்காக தேர்வு செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.