பஞ்சாப்:

ஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் தேச விடுதலைக் காக போராடிய  ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக்கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த 100 ஆண்டு நினைவு தினம் இன்று.

இதையொட்டி, அமிர்தசரசில் உள்ள  ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை நசுக்க 1919-ல் ரவுலட் சட்டம்  கொண்டு வரப்பட்டது. இதை  எதிர்த்து நடைபெற்ற  போராட்டம்காரணமாக  அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஒன்று திரண்டனர். இதை அறிந்த  ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர் படையின ருடன் வந்து, பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இந்த துப்பாக்கி சூட்டில்  1600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். அந்த இடமே ரத்த ஆறாக ஓடியது. இந்த கொடூர சம்பவத்திற்கு பின் விடுதலைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில் அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர்சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவம் மரியாதை செலுத்தினர்.