அகமதாபாத்:

‘‘சிறு மற்றும் குறு நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு தனது முதலாளித்துவ நண்பர்களை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த கட்சி கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில், ‘‘குஜராத் விவசாயிகளின் கடன் ரூ. 36 ஆயிரம் கோடி. ஆனால் டாடா நானோ நிறுவனத்திற்கு 0.01 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், குஜராத்தில் ஒரு நானோ காரை யாரும் பார்த்தது உண்டா?. அங்கு இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள 50 கார்பரேட் முதலாளிகளுக்காக மோடி பணியாற்றிக் கொண்டுள்ளார். மோடியின் 6 முதல் 7 கார்பரேட் நண்பர்கள் மீடியாக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் தான் விவசாயிகளின் முதுகெலும்பையும், மலைவாழ் மக்கள், பணியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில்களையும் சிதைத்து வருகின்றனர்’’ என்றார்.