திரிணமுல் காங்கிரஸ் எம்.பி திடீர் மரணம்

Must read

கொல்கத்தா:

முன்னாள் மத்திய அமைச்சரும், மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சுல்தான் அகமது இன்று மாரடைப்பால் இறந்தார்.

கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலேயே மரணமடைந்த அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவரது வயது 64. மாரடைப்பு ஏற்பட்டு வலியால் துடித்த அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் உலுபேரியா தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு தேர்வு செய்யப்ப்டடார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இவர் மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.

இவர் இரண்டு முறை மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதரவு மரணத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி, கவர்னர் கேசரி நாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article