நாக்பூர்

ரு அரிய வகை நோயினால் 36 ஆண்டுகளாக ஒரு ஆண் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த அதிசயம் நாக்பூரில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சு பகத் 1963-ம் ஆண்டு பிறந்தவர்.   இவருக்கு சிறுவயதில் இருந்தே வயிறு பெரிதாக காணப்பட்டும் அவர் ஆரோக்கியமாக இருந்தார். அவர் 20 வயது வரை பெரிய வயிற்றைப் பற்றி கவலை இல்லாமல் வீட்டருகே உள்ள பண்ணையில் வேலை செய்து வந்தார்.

அவரது வயிறு நாட்கள் செல்ல, செல்ல று பெரிதாகிக் கொண்டே பலூன் மாதிரி மாறியது. ஆயினும் சஞ்சு பகத் அதைப் பற்றி கவலைப்படாமல் வேலை பார்த்து வந்தார்.  அவரது நண்பர்கள் உள்ளிடோர் சஞ்சு பகத்தை ‘கர்ப்பிணி’ எனக் கிண்டல் செய்து வந்தது அவரது குடும்பத்தினருக்குக் கவலையை ஏற்படுத்தியது.

அவருக்கு ஒருகட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக  சுவாச பிரச்சினை ஏற்பட்டது.  அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காக வந்தார்.முதலில் மருத்துவர் அஜய் மேத்தா முதலில் சஞ்சு பகத்துக்கு வயிற்றுக்குள் கட்டி இருக்கலாம் என நினைத்து அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றி எடுக்க முடிவு செய்தார்.

ஆனால் அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கை, கால்கள் போன்ற உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையொட்டி நடந்த ஆய்வில் சஞ்சு பகத் அரிதிலும் அரிதான ‘கருவில் கரு’ என்ற நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. சஞ்சு 36 ஆண்டுகளாக இரட்டை குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

சஞ்சுவுக்கு உள்ள இந்த வகை நோய்ப் பாதிப்பில் பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒட்டுண்ணி போல வாழ்ந்துள்ளது. மருத்துவர்கள் சஞ்சு பகத் வயிற்றில் வளர்ந்த இரட்டை குழந்தைகளை அகற்றினர். அந்த குழந்தைகளைப் பார்க்க ச்ஞ்சு பகத் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.