கடந்த 12ம் தேதி வெளியான “சவரக்கத்தி” படத்தின் செய்தியாளர் கூட்டம் சென்னை வடபழனியில் நடந்த்து. படத்தின் கதை வசனம் எழுதியதோடு, நடித்து தயாரித்த மிஷ்கின் பேச்சு வழக்கம்போல பரபரப்புதான்.

“உண்மையாகவே சொல்கிறேன்.  சவரக்கத்தி படம் எனக்கு எந்த லாபமும் கொடுக்கவில்லை. தவிர. இந்தப் படத்தை நான் எந்த லாபத்திற்கும் எடுக்கவும் இல்லை.

லாப நோக்கோடு படத்தை எடுத்திருந்தால், பட இயக்குநரான  என் தம்பியிடம் சொல்லி ஒரு குத்துப்பாட்டைச் சொருகி ஆடியன்ஸை உள்ள இழுத்திருக்கலாம். அப்படி நான் செய்யவில்லை.

தவிர  பலரும் என்னிடம், கிளைமாக்ஸ்  நேரத்தில் சோகப்பாட்டை வைக்காதீர்கள் என்றார்கள். அது சோகமான பாட்டு இல்ல, அந்தப் பிச்சை என்கிற கதாபாத்திரம் வாழ்க்கையில் அவன் மாறி இருக்கும்போது அந்தத் தருணத்தில் வருகிற தாலாட்டு என்று நான் சொன்னேன்” என்றார்.

“அதெல்லாம் சரி.. தரமான இயக்குநர் என்று பெயர் வாங்கிய மிஷ்கின், குத்து பாட்டு இருந்தால் படம் ஓடிவிடும் என்று சொல்லலாமா?

குத்துப்பாட்டு இருந்த படங்கள் எத்தனையோ தோல்வியும் அடைந்திருக்கின்றன. அது  இல்லாத படங்கள் பல வெற்றியும் பெற்றிருக்கின்றன.

மிஷ்கின் பேச்சு, ரசிகர்களை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது” என்ற ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.