டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக்கொண் டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் எனது ஊழியர் ஒருவருக்கும் நேற்று கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் இன்று நெகட்டிவ் என்று சோதனை செய்தேன், இருப்பினும் நான் தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தனக்கு கோவிட் தொற்று உறுதியாகி இருப்பதால் நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.