டெல்லி: இந்தியாவின் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு  எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை ஒமிக்ரான பாதிப்பில் இருந்து  766 பேர்  மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். தினசரி நேர்மறை விகிதம் 3.24 சதவீதமாக உள்ளது.

மத்திய  சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி வரையிலான கொரோனா தொற்று மற்றும்  ஒமிக்ரான் பாதிப்பு குறித்து  தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3.49 கோடியை தாண்டியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை தாண்டியது.

அதுபோல ஒமிக்ரான பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  1892 பேருக்கு ஒமிக்ரான் உறுயாகி உள்ள நிலையில், 766 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 568 பேரும், டெல்லியில் 382 பேரும் பாதித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் 121 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 100 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.