திருவனந்தபுரம்:

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், கதாநாயகி பிரியா வாரியர் கண் அடித்து கதாநாயகனிடம் காதலை வெளிப்ப டுத்துவது போன்ற பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த காட்சியில் இருந்த பிரியா வாரியரின் முக பாவங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. , ஒரே பாடலில் பிரியா வாரியர் பிரபலமடைந்தார். இந்நிலையில் அந்த காதல் பாடல் இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து ஐதராபாத் போலீசில் முகீத் கான் என்பவர் புகார் அளித்துள்ளார்.

பட இயக்குனர் ஓமர் லுலு கூறுகையில், ‘‘ அந்த பாடல் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எ டுக்கப்படவில்லை. அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வரிகள் எதுவும் இல்லை. அனைத்து சமூகத்தினரும் பாடும் பழைய பாடல் தான் படத்தில் இடம்பெற்றுள்ளது’’ என்றார்.