டில்லி:

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு இலவச பயண ஏற்பாடு செய்யப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து வருகிறது.

நாகாலாந்த், மேகாலயா, திரிபுரா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. மேகாலயாவகில் 75 சதவீதம் பேரும், நாகாலாந்தில் 88 சதவீதம் பேரும் கிறிஸ்தவர்கள்.

நாகாலாந்தில் பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சிக்கு வந்தால், கிறிஸ்தவர்கள் இலவசமாக ஜெருசலேம் அழைத்து செல்லப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. இந்த வாக்குறுதி போலித்தனமானது என்றும், சந்தர்ப்பவாதம் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. ஹஜ் மானியத்தை ரத்து செய்துவிட்டு இப்படி கூறுவதை யாரும் நம்புவதற்கில்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது.