முரசொலி பவள விழா புதிய அழைப்பிதழ்! வை.கோ பெயர் சேர்ப்பு

Must read

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் வைகோ பெயருடன் முரசொலி பவளவிழா அழைப்பிதழ் புதிதாக தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடைபெற்ற முரசொலி பவள விழா கூட்டம் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, மற்றொரு தேதியில் பவள விழா கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தி.மு.க.வின் அதிகாரப்பூா்வ நாளிதழான முரசொலி தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு விழாவை அக்கட்சி சாா்பில் வெகு விமாிசையாக கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற்றது.

முதல் நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திாிகைகளின் ஆசிாியா்கள், நடிகா் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோா் பங்குபெற விழா சிறப்பாக நடைபெற்றது.

மறுநாள் நந்தனம் ஒய்எம்சிய மைதானத்தில்  நடைபெற்ற விழாவில் அனைத்து முக்கிய அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தொடர் மழை காரணமாக விழா அவசர அவசரமாக நிறைவு செய்யப்பட்டது. அப்போது விழா மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முரசொலி பவள விழா வரும் செப்டம்பர் 5ந்தேதி நடைபெறும் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்துவரும் திமுக தலைவர் கருணா நிதியை,  மாியாதை நிமித்தமாக வை.கோ சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது செய்தியாளா்களிடம் பேசிய வைகோ, எனது அரசியல் வாழ்க்கையில் 29 ஆண்டு காலத்தை கலைஞருடன் நான் செலவிட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களாக கலைஞா் எனது கனவில் வந்து செல்கிறாா் என்று கூறினார். மேலும் முரசொலி பவள விழாவில் கலந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இதன் காரணமாக, வரும் செப்டம்பர் 5ந்தேதி நடைபெற இருக்கும் முரசொலியின் பவள விழா அழைப்பிதழில் ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோவின் பெயருடன் புதிதாக சேர்க்கப்பட்டு, புதிய அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article