கம்பம்: தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் என்றைக்காவது ஆங்கு சென்று முல்லைபெரியாறு அணையை பார்த்தார்களா?  என கேள்வி எழுப்பிய நிலையில், முல்லை பெரியாறு அணை அருகே புதியஅணை தேவையில்லை என தமிழக நீர்பாசனத்துறை துரைமுருகன் கூறினார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று முல்லை பெரியாறு அணைக்கு சென்று பார்வையிட்டனர். பிரதான அணை, பேபி அணை, மண்ணை, கேரள மாநிலத்திற்கு உபரி நீர் செல்லும் மதகு பகுதிகளை பார்வையிட்டு  ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்,  முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது, புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், முல்லைப் பெரியாறு அணை உச்சநீதிமன்ற உத்தரவுபடி, பல்வேறு தொழில்நுட்ப குழுவினர் பார்வையிட்டு அணை பலமாக உள்ளதாக கூறியுள்ளனர். எனவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தேவையில்லை என்று கூறினார்.

அணையில் நீர் தேக்குதல் மற்றும் அணை பாதுகாப்பு விவகாரத்தில்,  கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிகாலத்திலேயே தீர்வு காண = நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியவர், விரைவில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் முல்லை பெரியாறு அணையில் விரைவு படகுகள் இயக்கப்படும் என்றார்.

மேலும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக அணையை பார்வையிட  செல்லும்போது,  கடந்த 10 ஆண்டுகளாக, அணையை பார்வையிடாத ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவருக்கும், தற்போது அணைக்காக, உண்ணாவிரதம் இருக்கத் தகுதி இல்லை என்றவர், அவர்கள்  முல்லைப் பெரியாறு அணையை பத்தாண்டுகளாக பார்த்திருப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

பின்னர்,.  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழுமம் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, சட்டமன்ற உறுப்பினர்கள் என். ராமகிருஷ்ணன், ஆ. மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், கோ. தளபதி, வெங்கடேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.