சென்னை: டெல்லியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று சந்தித்தார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அறிவாலயம் ஏப்ரல் 2ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்

இன்று மதியம் முதல் மாலை வரை பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாராளு மன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டருந்தார்.

அப்போது திடீரென அங்கு நேரில் வந்த  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  அப்போது, ஏப்ரல் 2ந்தேதி நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்தார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் சந்திப்பு