திருத்ணி: கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததுடன், திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகளை  அமைக்க அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு கோவில் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருத்தணி முருகன் கோவிலுக்கு வெள்ளித்தேர் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறை வேற்றப்படும் என கூறியவர், திருத்தணி கோவிலில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கான தங்கும் அறைகளும் விரைவில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,  திருத்தணி கோவில் ராஜகோபுரம் ரதவீதி வரை ரூ.9 லட்சத்த்தில் 56 படிக்கட்டுகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

மேலும்,  தமிழ்நாட்டில் காலியாக உள்ள கோவில் அறங்காவலர் குழு விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியவர்,  புதிய கோவில்களை துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அறிவுறுத்தல்களை இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டுள்ளது என்றார்.

அதில், விதிகளை மீறி செயல்படும் திருக்கோவில் உதவி ஆணையர் மற்றும் தலைமை எழுத்தர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், ராஜகண்ணப்பன் மீதான புகாருக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், நிர்வாக வசதிக்காகவே இலாகா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.