பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்ஸனின் ‘மிஸ்டர் பீன்’ நிகழ்ச்சி ஆரம்பித்து 30 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

1990-ம் வருடம் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் பீன்’. தொடர்ந்து உலகின் பல நாடுகளில், பல்வேறு சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது.

வசனமே இல்லாத நகைச்சுவைத் தொடர் இது . வளர்ந்த மனிதரின் உடலில் இருக்கும் குழந்தை என்பதே அந்தக் கதாபாத்திரம்.