ப்ரூஸ் வில்லிஸ், மேகன் ஃபாக்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மிட்நைட் இன் தி ஸ்விட்ச்க்ராஸ்’. இப்படத்தை ராண்டால் எம்மெட் இயக்கி வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மீண்டும் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் படக்குழுவினர் இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.