போபால்:

தன்னை கொள்ளைக்காரர் என்று வர்ணித்த ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ரத்து செய்துள்ளார்.


மத்திய பிரதேசத்தில் 13 ஆண்டுகால பாஜக ஆட்சியை தோற்கடித்துவிட்டு, கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.
ஆட்சி அமைத்தவுடனேயே பாஜக போராட்டங்களை நடத்த தொடங்கிவிட்டது.

இந்நிலையில், மக்கள் திரண்டிருந்த கூட்டம் ஒன்றில் பேசிய அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் முகேஸ் திவாரி என்பவர், முதல்வர் கமல்நாத்தின் பெயரை கொள்ளைக்காரர் என்றே அழைத்தார்.

இது குறித்து காங்கிரஸார் அளித்த புகாரின்பேரில், தலைமை ஆசிரியர் முகேஸ் திவாரியை ஜபல்பூர் கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில், அவரை மன்னித்து, கலெக்டர் பிறப்பித்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார் முதல்வர் கமல்நாத்.