போராடும் அசாம் மாணவர்களை மிரட்டிய பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு

கவுகாத்தி:

இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு பாஜக தலைவர் பிரதீப் தத்தா மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சில்சாரில் உள்ள அசாம் பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

உள்ளூர் பாஜக தலைவர் தத்தா மாணவர்களை எச்சரித்துக் கூறும்போது, படிப்பை மட்டும் பாருங்கள். அரசியலுக்கு வராதீர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். தொடர்ந்து போராடினால், வங்காளிகள் அதிகம் உள்ள பராக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் அசாமியர்களை சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இந்த மிரட்டலை எதிர்த்து, அசாம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: மாணவர்களுக்கு பாஜக மிரட்டல்., மிரட்டியவர் மீது வழக்குப் பதிவு
-=-