சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கொசு தொல்லை கொடுத்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. மேலும் 1913 என்ற எண்ணில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை அதிகமுள்ள சென்னையில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீர் நிலைகள், கால்வாய்கள் முறையான பராமரிப்பு செய்யப்படாமல் இருப்பதால் கொசுக்கள் அதிக அளவில் பரவி, மக்களுக்கு பல்வேறு நோய்களை கொடுத்து வருகின்றன. பருவமழை முடிந்த பின் கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதனால் அங்கே கொசு தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவமாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும், உங்கள் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் தீவிர கொசு ஒழிப்பு பணியின் ஒரு பகுதியாக 2,919 தெருக்களில் கொசு புகை மற்றும் மருந்துகள் வாகனங்கள் மற்றும் கையால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் பரப்பப்பட்டு கொசு ஒழிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி மெத்தனம்: கொசுத்தொல்லை அதிகரிப்பு – தெருக்களில் அடிப்பது கொசுமருந்தா? அல்லது…..?