சென்னை: தமிழ்நாட்டில், மாநில தகவல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நியமித்த மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் குறித்த தேடுதல் குழுத் தலைவர் நீதியரசர் அக்பர் அலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய மாநில தகவல் ஆணையராக இறையன்பு நியமிக்கப்படுவார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே அலாவுதீன் போன்றோர் இடம்பெற்று இருக்கின்றனர். பொது வாழ்வில் பரந்துபட்ட அறிவையும் அனுபவத்தையும் கொண்டிருக்கக் கூடியவர்கள் தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவு குழு அறிவித்தது.

இதனை அடுத்து சட்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை இதழியல், வெகுஜன ஊடகம் நிர்வாகம் போன்ற பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை செய்தவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையராக நியமனம் செய்யப்படுவார் என தெரிவு குழு தெரிவித்துள்ளது.

இதன்படி தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 15(6)ன் படிநாடாளுமன்ற உறுப்பினரோ சட்டப்பேரவை உறுப்பினரோ தகவல் ஆணையராக பொறுப்பு வகிக்க முடியாது. ஊதியமாக வரக்கூடிய பணிகளில் இருப்போர் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படுவோர் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் போன்றோர் விண்ணப்பித்துக் கொள்ள முடியாது. மேலும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களுக்கான பதவிக்காலம் 3 வருடங்கள் ஆகும். . தலைமை தகவல் ஆணையரின் ஊதியம் ரூ. 2. 5 லட்சமாகவும், தகவல் ஆணையா்களின் ஊதியம் ரூ. 2.25 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தமிழக தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் 4 பேரின் பதவிக்காக அமைக்கப்பட்ட  தேடுதல் குழு,. அதற்கான தகுதிவாய்ந்த நபர்களை தேர்வு செய்துள்ளது. அது தொடர்பான அறிக்கையை தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தேடுதல் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி சமர்ப்பித்தார்.

இதற்கிடையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். அதனால், அவருக்கே தலைமை தேர்தல் ஆணையர் பதவி கிடைக்கும் வாய்ப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது தலைமைச்செயலாளராக உள்ள  இறையன்பு பணி நிறைவு பெறும் ஜூன் 16- ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போதைய அரசியல் களம் காரணமாக, அவர்   முன்னதாகவே ஓய்வில் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும்,  அதனால், ஓய்வுக்கு பிறகு மாநில தகவல் தலைமை ஆணையராக பதவி வகிக்க ஆசைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக விசுவாசியான, அவரது ஆசையை தற்போதைய ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் என கூறப்படுகிறது.

அதிகார போதை யாரை விட்டது?

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை தர மறுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்! மத்திய தகவல் ஆணையம்