விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாகும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன், விஜய்-யை வைத்து கடத்தல் ஜனரில் இயக்கி இருக்கும் மற்றொரு படமான பீஸ்ட் படத்தில் வன்முறை காரணமாக முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஷாப்பிங் மாலில் கடத்தி வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்பது போல் உள்ள காட்சிகள் அடங்கிய இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளானது.

தவிர, படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதும் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாலும் இந்தப் படத்தை திரையிட குவைத் அரசு தடை விதித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் சென்சார் சான்று தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்திற்கு 39 இடத்தில் கத்தரி விழுந்ததாகவும்.

8 இடங்களில் அதீத வன்முறை உள்ளதாகவும், 6 இடங்களில் உள்ள ஆபாச வார்த்தைகளை மியூட் செய்யவும் சென்சார் போர்ட் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.