பணம் பறித்ததாக இ-மெயில் மூலம் ‘பப்ஜி மதன்’ மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

Must read

சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பாகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் பப்ஜி மதன் மீது, பணம் பறித்ததாக  100க்கும் மேற்பட்டோர் காவல்துறை கொடுத்த இமெயிலில் புகார் தெரிவித்து உள்ளனனர். இது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

பப்ஜி கேம் புகழ் யுடியூபர், ஆன்லைன் மூலம் பப்ஜி ஆட கற்றுக்கொடுப்பதாக  ஆபாசமாக பேசி பலரிடம் இருந்து பணத்தை குவித்து வந்துள்ளார். அவரது ஆபாச பேச்சு குறித்து, புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அதில், இவரும் இவரது மனைவி கிருத்திகாவும் இணைந்து யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்ததும் இவர்களுக்கு ஒரு சில தோழிகள் உதவி செய்ததும் தெரியவந்தது. இதன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டு மதனின் மனைவி கிருத்திகா முதலில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த மதனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  ஆன்லைனில், ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் மதன் சம்பாதித்ததும் ஆடி கார்கள், பங்களாக்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவதாக கூறி பண மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து  பப்ஜி மதனிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இ-மெயில் மூலம் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.  இதையடுத்து, அந்த  இ-மெயில் முகவரியில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறையில் உள்ள மதனை போலீஸ் காவலில் எடுங்தது விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More articles

Latest article