சேப்பாக்கத்தில் எந்திரங்களைக் கொண்டு மனிதக் கழிவுகள் அகற்றம்! உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்

Must read

சென்னை: மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டு, தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி, தனது முன்னெடுப்பில், எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொய்யாத்தோப்பு பகுதியில் இந்த எந்திர செயல்பாட்டை துவக்கி வைத்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, சேப்பாக்கம் கொய்யாத்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு 1975ல் கலைஞரின் கழக ஆட்சியில் கட்டப்பட்டது.அதை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டுமென்பது அப்பகுதியினரின் நீண்டகால கோரிக்கை குறித்து. அஅமைச்சர் தாமோஅன்பரசன் உடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் கேனால் ஓரம் உள்ள ஹஜாபி, அப்துல்லா ஆகியோர் தங்கள் பகுதிக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களின் வீட்டை பார்வையிட்டு அவர்களின் கோரிக்கையை குடிசை மாற்று வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தாகதெரிவித்து உள்ளார்.

More articles

Latest article