சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜயின் மூன்று தனிச்செயலாளர்களுககு அரசின் துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் துறைகள் ரீதியான சந்திப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக முதல்வரின் தனிச்செயலர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அவரது முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர்- 1) பி.செந்தில் குமாரையும் தனிச் செயலாளர்-2 வதாக லட்சுமி பிரியாவையும் தமிழக அரசு நியமித்துள்ளது. பின்னர் 3வதாக விஷ்ணுவையம் நியமனம் செய்தது. தற்போது அவர்களுக்கான  துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த 10ஆம் தேதி முதலைமச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருடைய தனிச்செயலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அவர்கள், துறை ரீதியான சந்திப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் விதமாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில், “15-05-2026 தேதியிட்ட இந்த உத்தரவின்படி, முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்களுக்கு பல்வேறு துறைகள் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன.

டாக்டர் பி. செந்தில்குமார், ஐ.ஏ.எஸ்., கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நிதித் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தித் துறை, தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜி.லக்ஷ்மி பிரியா, ஐ.ஏ.எஸ்., 2வது செயலாளருக்கு முதலமைச்சர் அலுவலக பொது நிர்வாகம், அரசு நெறிமுறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

டாக்டர் ஏ.அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ்., 3வது செயலாளருக்கு இயற்கை வளங்கள், நீர்வளத் துறை, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, சமூக சீர்திருத்தம், போக்குவரத்து, சட்டத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வி.விஷ்ணு, ஐ.ஏ.எஸ்., கூடுதல் செயலாளருக்கு வணிக வரித் துறை, சுற்றுலாத் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு, 12-05-2026 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN CM VIJAY,

CM PERSONAL SECRETARIES,

TN GOVT GO,

முதல்வரின் தனிச்செயலர்கள்,

DEPTS ALLOCATED TO CM SECRETARIES,

[youtube-feed feed=1]