டில்லி:
சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலம் யூபிஐ எனப்படும் பணப் பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தபட உள்ளது.
whatsapp
200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப், யூபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வசதி வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் முதல் கிடைக்கும்.
பணப்பரிமாற்றத்திற்கான பிரத்யேகமான செயலியை வெளியிடவும் வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
வாட்ஸ் அப் தற்போது 60 மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. யூபிஐ செயலி 2 வங்கி கணக்குகளுக்கு இடையே பணபரிமாற்றத்தை எளிதாக்கும். யூபிஐ.-ல் தற்போது 22 சதவீத பணப்பரிவர்த்தனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.