லண்டன்: லாவண்டர் ஹில்ஸ் பகுதியில் பஸ் விபத்து!

லண்டன்,

ண்டன் வடக்கு பகுதியான லாவண்டர் ஹில்ஸ் பகுதியில் இரட்டை மாடி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

லண்டன் டிரான்ஸ்போர்டை சேர்ந்த ரூட் எண் 77 என்ற டபுள் டெக்கர் பஸ் வடக்கு லண்டனில்லாவண்டர் ஹில்ஸ் பகுதியில் சென்றபோது  விபத்துக்குள்ளானது.

சம்பவத்தன்று அரசுக்கு சொந்த இரட்டை மாடி பஸ் (டபுள் டெக்கர்) லாவன்டெர் ஹில்ஸ் பகுதியில் ஒரு வளைவில் திருப்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் இருந்த கடையின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். பஸ் டிரைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக லண்டன் தீயணைப்பு அதிகாரி கூறி உள்ளார்.


English Summary
Lavender Hill bus crash: Two women trapped