எடப்பாடி பழனிச்சாமி துரோகி!: நாஞ்சில் சம்பத் காட்டம்

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி” என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்துள்ளார்..

இன்று அ.தி.மு.க.தலைமைச் செயலகத்தில் கூடிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர். துணைப்பொதுச் செயலாளராக பதவி வகிக்க டிடிவி தினகனை கட்சி விதிப்படி அனுமதி கிடையாது என்பதும் அதில் ஒன்று.

இதே கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, நாஞ்சில் சம்பத், “எடப்பாடி பழனிச்சாமியின் சுயரூபம் வெளிப்பட்டிருக்கிறது. வரலாற்று பக்கத்தில் துரோகிகளுக்கு என்ன தண்டனை கிடைத்ததோ அது எடப்பாடிக்கும் கிடைக்கும். டிடிவி தினகரனை ஒதுக்க வேண்டும் என்று தனக்கு கொடுக்கப்பட்ட அஜண்டாவை நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி.

இது எடுபடாது. வரும் 17ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுப்போம். எடப்பாடி உள்ளிட்ட அவரது அணியினர் எவருக்கும் தொண்டர்கள் ஆதரவு கிடையாது. டிடிவி தினகரனுக்கே தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

 
English Summary
Nanjil sampath says that Edappadi is a traitor