டில்லி

தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் போட்டியிடுகிறார்.

வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 55 இடங்களுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று மேலும் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனுக்கு ஜூபிலி ஹில்ஸ் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அசாருதீன் ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.

“என்னை தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நிறுத்தியதற்காகக் காங்கிரஸ் கட்சிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி , சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, டிபிசிசி தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என்னை ஜூப்ளி ஹில்ஸில் என்னை களமிறங்கியதில் மகிழ்ச்சி. இறைவனின் ஆசியுடன் தேர்தலில் வெற்றி பெற முயல்வோம்” 

என்று வீடியோ அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார்.