ர்மசாலா

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் நியூசிலாந்து அணி மோதுகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இன்று இந்த தொடரில் நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோத உள்ளன. ஏற்கனவே நியூசிலாந்து 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 1 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடனும் உள்ளன.

எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிக்கொள்ளும். எனவே இன்றைய ஆட்டம் கடும் பரபரப்புடன் நடக்க உள்ளது.  இந்த போட்டி இந்திய நேரப்படி ஆட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்குகிறது.