டில்லி

ஜி எஸ் டி யால் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மக்கள் கடிதம் எழுதியுள்ளனர் என மோடி தனது வானொலி உரையில் கூறி உள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிறு அன்று வானொலியில் மன் கி பாத் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.  மன் கி பாத் என்றால் மனதோடு பேச்சு என பொருள்.  இன்றும் அதே நிகழ்வில் உரையாற்றினார்.

அந்த உரையில் அவர் தெரிவித்ததாவது :

இந்த வருடம் வட இந்தியாவில் பருவமழை தேவைக்கு அதிகமாகவே பெய்தது.  மழை மகிழ்வைக் கொடுத்தாலும், வெள்ளம் சோகத்தை கொடுத்தது.  அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் உதவி வழங்கினர்.  வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நிவாரண உதவிகளை செய்து கொடுத்துள்ளோம்.   வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்தியாவில் ஜி எஸ் டி அமுலாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.  இது மக்களிடையே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  இதற்கு அவர்களின் மகிழ்ச்சியை தெரிவிக்கும் கடிதங்களே சாட்சி.  அனத்து மக்களும் விலை குறைந்துள்ளதாக கடிதம் எழுதியுள்ளனர்.  குறிப்பாக ஏழை ஒருவர் அன்றாடப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கடிதம் எழுதியுள்ளது கண்டு நானும் மகிழ்ந்தேன்.  ஜி எஸ் டி யை வெற்றிகரமாக கொண்டு வந்தது நிச்சயமாக ஒரு பரிசோதனை தான்”

எனக் கூறி மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் மோடி தெரிவித்துக் கொண்டுள்ளார்.