மதுரை: 

யர்மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியுடன் சந்தித்ததால், திமுக  போராட்டங்களை ஒத்திவைத்தாக கூறுவது தவறு. ஊடகங்கள் அவர்களின் வசதிக்கேற்ப செய்தி வெளியிடுகிறார்கள் என்று ஊடகங்களை கடுமையாக சாடினார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில்  இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர்.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டார்.

அவர் பேசியதாவது,

மழை காரணமாக பண மதிப்பிழப்புக்கு எதிராக 6 மாவட்டங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது..

பணபுழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி ஆட்சி என்பதை நாடும், நாட்டு மக்களும் உணர்ந்துள்ளார்கள்.  எந்தவித திட்டமிடல் இல்லாமல்ர ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  கடந்த 6ந்தேதி தமிழகம் வந்திருந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

ஆனால், அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள், ஸ்டாலின்  மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறினார்கள். அவர்களின் கற்பனைக்கு ஏற்க கூட்டணி உருவாகிவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் என்று ஊடகங்களை கடுமையாக சாடினார்.

கருணாநிதியை மோடி நேரில் நலம் விசாரித்தது மனிதாபிமான செயல். இந்த சந்திப்பை வைத்து ஆதாயம் தேடுபவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது.

மோடி கருணாநிதி சந்திப்பை அவரவர் வசதிக்கேற்ப திட்டமிட்டு பேசுகின்றனர். மோடியை நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்த மாட்டோம் என்றும கூறினார்.

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை பொருளாதார நிபுணர்கள் எதிர்க்கின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்துவதை 3 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என கூறினோம்.

ஆனால் ஏற்கவில்லை. தற்போது ஜிஎஸ்டி வரி முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஜிஎஸ்டியால் ஏழைகள் பாதிக்கிறார்கள் என்ற எதிர்கட்சி வாதத்தை முன்பு ஏற்கவில்லை. தற்போது பிரதமர் ஏற்க முன் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.