பெங்களூரில் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாடு: மோடி தொடங்கி வைக்கிறார்!

Must read

பெங்களூரு,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மூன்று நாள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சசகம் சார்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்  பேசிய, இந்திய வெளிவிவகாரத்துறை செயலராளர் தியானேஷ்வர்,

பிரவசி பாரதிய திவாஸ், இந்தியாஅரசுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளது. அவர்களுக்கான களமாக இந்த மாநாடு அமையும்.

தற்போது வெளிநாடுகளிள் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக உள்ளது. இதில் 1.34 கோடிபேர் இந்திய வம்சாவளியினர்.

மேலும், இந்த மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது  என்றார்.

பெங்களூருவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் போர்ச்சுகல் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

 

வரும் 7ந்தேதி முதல் 9ந்தேதி வரை கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான 14வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக 8ந்தேதியன்று  போர்ச்சுகல்  பிரதமர்  டாக்டர் அண்டோனியோ கோஸ்டா கலந்துகொள்கிறார்.

மேலும்  மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாநாடு குறித்த கண்காட்சியை கர்நாடக முதல்வர் சித்தராமையாக தொடங்கி வைக்கிறார்.

 

இந்த மாநாட்டில் 4000க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article