பிப்ரவரி 1: மத்திய பட்ஜெட் தாக்கல்

Must read

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதன் முறையாக, ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லாமல், ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  கூடி விவாதித்த.து.  உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில் நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஆனந்த் குமார் உள்ளிட்டோர் இகூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குழுவினர், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கும் என்றும் பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

பிப்ரவரி 9-ம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என்றும், 3 கட்டங்களாக கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினர்.

முதல்முறையாக இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட் தனியாக இன்றி ஒரே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.

More articles

Latest article