புதுடெல்லி: 
க்களுக்குத் தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனைகள் படைத்து வருவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றைப் பிரியங்கா காந்தி இட்டுள்ளார். நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் வேலை வாய்ப்பின்மை, அரசு சொத்துகள் விற்பனை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதாகவும் இது போன்ற முறையில்தான் மோடி அரசு சாதனைகளைப் படைத்து வருவதாகவும் பிரியங்கா சாடியுள்ளார்.
இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வை எதிர்த்து பெரிய அளவில் போராட்டம் நடத்தக் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளில் காங்கிரஸ் பிரமுகர்கள் பாதயாத்திரையும் செல்வார்கள் என கே.சி.வேணுகோபால் கூறியிருக்கிறார்.